Thursday, June 25, 2020

நீர்கொழும்பு மீனவர்களின் வலையில் அகப்பட்ட பல இலட்சம் ரூபா பெறுமதியான மீன் ஏலத்தில் விற்பனை செய்வதற்காக ஜப்பானுக்கு அனுப்பி வைப்பு



நீர்கொழும்பு மீனவர்களின் வலையில் அரிய வகை மீன் ஒன்று அகப்பட்டுள்ளது.
நீர்கொழம்பு கடற்பகுதியிலிருந்து கடந்த மாதம் 7 ஆம் திகதி  வின்மெரின் (Win marine)  என்ற  பெயர் பொறிக்கப்பட்ட ரோலர் படகில் தொழிலுக்குச் சென்ற ஏழு பேர் அடங்கிய மீனவர்களே இந்த மீனைப் பிடித்துள்ளனர்.+
Southern Bluefin tuna என்ற ரகத்தையுடைய கெலவல்லா மீனே பிடிக்கப்பட்டுள்ளது.  மீனவர்கள்  மீன்களைப் பிடித்துக் கொணடு வரும் போது கடந்த ஆறு தினங்களுக்கு முன்னர் இந்த அரிய வகை அதிக பெறுமதியுடைய மீன் அகப்பட்டுள்ளது.
இதன் பெறுமதி அதிகம் என்பதாலும் Southern Bluefin tuna என்ற ரகத்தையுடைய மீனின்  உயர் தரத்தை உடைய மீனின் ஒரு கிலோவினது விலை ஐயாயிரம் (5000 டொலர்) டொலர்  வரை

Sunday, June 21, 2020

நீர்கொழும்பு பள்ளிவாசலில் சூரிய கிரகணத் தொழுகை

நீர்கொழும்பு மஸ்ஜித் பஸ்ல் பள்ளிவாசலில் இன்று முற்பகல் 11.30 மணியளவில் கிரகணத் தொழுகை இடம்பெற்றது.
இன்று இடம்பெற்ற சூரிய கிரகணத்தையிட்டு இந்த தொழுகை இடம்பெற்றது.
புள்ளிவாசலுக்கு 50 இற்கும் குறைவானோர் அனுமதிக்கப்பட்துடன் பள்ளிவாசலுக்கு வருகை தந்தோர் சுகாதார அறிவுறுத்தல்களைப் பின்பற்றியதுடன் சமூக இடைவெளியை பேணி தொழுகையில் ஈடுபட்டனர்.

Sunday, May 24, 2020

கொரோனா எனும் எச்சரிக்கை



சிறு கிருமி தொடுத்திருக்கும் போர் - இன்று
உலகமே நடு நடுங்குது பார்
பலவான் மனிதன் என்று பேர் - இன்று
பலயீன மானதுவே மனிதனது வேர்!

வானில் பறக்கும் பறவைகளைப் பார்
மண்ணில் வாழும் உயிரினங்களைப் பார்
நீரில் வாழும் மீன்களையும் பார்
இவைகள் வாழ்வில் மாற்றமில்லை பார்

'சகாத்’ எனும் பூ ! (கவிதை) - கலாநெஞ்சன் ஷாஜஹான்





Sunday, November 1, 2015

வாழ்த்துப்பா



(நீர்கொழும்பு பெரியமுல்லையில் அமைந்துள்ள அஹ்மதியா பாலர் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைவதையிட்டு வெள்ளி விழா 'கலை விழா' ஞாயிற்றுக்கிழமை (1-11-2015) மாலை அஹ்மதியா ஜுப்லி மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் அடியேன் வாழ்த்துப் பா வாசிக்கும் காட்சியும், சபையோரும்)
                    

                 வெள்ளி விழாக் காணும்
                        அஹ்மதிய்யா பள்ளிக் கூடமே
                   துள்ளி;த் திரியும் பாலகர்கள்
                        அறிவைத் தேடும் கூடமே!

                   வண்ணத்துப் பூச்சிகள்
                        பறக்கும் சோலையே
                   சின்னஞ் சிறு சிறுவர்கள்
                        கல்வி கற்கும் சோலையே!

                   சீர் கல்வி நற்பண்பு
                        பாலர் வகுப்பிலே
                   வேர் பதிக்கும் நிச்சயமாய்
                       ‘அஹ்மதிய்யா' வகுப்பிலே!

Wednesday, July 29, 2015

உலக நிலா உதிர்ந்தது


உலக நிலா
உதிர்ந்தது!
பாரத மண்ணின்
அறிவியல் சூரியன்
விண்ணகம் புறப்பட்டது!

கனவு கண்ட
ஞான விழிகள்
மூடிக் கொண்டன
நிரந்தரமாய்....

ஒரு வரலாற்றுப் புத்தகத்தின்
இறுதி அத்தியாயம்
முற்றுப் பெற்றது.

'அக்கினிச் சிறகை'
தந்த ஆளுமை
பறந்து போனது

பாரதம் துறந்து!

Sunday, July 19, 2015

என் ஆன்மாவின் கவிதை இறைவன்



என் ஆன்மாவில் இருப்பவனே!
ஏக இறைவனே!
நினை நான் எப்படி புகழ்வேன்?

துன்பங்கள்
என்னை தீயாய் பொசுக்கும் போது
மழை நீராய் பொழிந்து
அவற்றை அணைப்பவனே

நான் ஒன்றுமில்லாத வெற்று நிலம் !
நீ தான் வளங்கள் தந்தாய்.
இந்த வெற்று நிலத்தில் இருக்கும்
மரஞ், செடி, கொடிகள்
மலர்கள், கனிகள் எல்லாம்
நீ விதைத்த விதைகள்
நீ பொழிந்த அருள்கள்

நான் எப்போதெல்லாம்
துயரச் சேற்றில் மூழ்குவேனோ
அப்போதெல்லாம் நீ தான்
கைகொடுத்து காப்பாற்றுகிறாய்!
நான் ஒரு தூசு!
காய்ந்த சருகு!
புயலில் அகப்பட்ட காகிதத் துண்டு!
ஆனால்
நான் அவமானப்படும் போதெல்லாம் - நீ
என்னை கௌரவப்படுத்துகிறாய்!
காயப்படும் போதெல்லாம்
சுகப்படுத்துகிறாய்!

சிந்தனை செய் மனிதா!




ஓ...மனிதனே!
எங்கே ஓடிக்கொண்டிருக்கிறாய்?
ஓய்வின்றி
பொருள் தேடி ஓடும் நீ
இதனைப் பற்றியும்
பொறுமையாய் சற்று யோசி!

மனிதா.... !
உன்  உறுப்புக்களை
உருப்படியாய் பயன்படுத்துகிறாயா?
நல்லவைகளை
தேக்கி வைத்துக் கொள்ளவும்;
தீயவைகளை
நீக்கி வைத்துக்கொள்ளவும்
உனக்குத் தெரியுமா?

புனித ரமழானை மறவோமே!



இறை மறை அருளப் பெற்ற
   இனிய நல் ரமழானே!
அருள் மாரி  பொழிந்து வந்த
   அற்புத ரமழானே!
இருள் நீக்கி ஒளி தந்த
   உன்னத ரமழானே!
இறை வனவன் நேசத்;தை
   பெற்றுத் தந்த ரமழானே!


இச்சைகளை அடக்கச் செய்த
   இங்கித ரமழானே!
அச்சங் கொள் இறைவன் மீது
   ஏன்று சொன்ன ரமழானே!
கஷ்டங்களை உணர்ந்து கொள்ள
   களம் அமைத்த ரமழானே!
நஷ்டப்பட்ட மனிதருக்கு
   நலங் கொடுத்த ரமழானே!

Saturday, December 7, 2013

விடுதலை கீதம் ஓய்ந்து விட்டது



ஒரு
கறுப்புச் சூரியன்
ஓய்வெடுத்துக் கொண்டது
நிரந்தரமாய்!

முழு நிலவு
முழுமையாய்
மறைந்தது
கால(னின்) மேகத்திற்குள்..!

சிறையை வென்றவரை
காலன்
சிறைப்படுத்திக் கொண்டான்!

ஒரு சகாப்தம்
நிறைவுக்கு வந்தது!
ஒரு நீண்ட வரலாற்றின்
இறுதி அத்தியாயம்
எழுதப்பட்டு விட்டது.
விடுதலை கீதம்
ஓய்ந்துவிட்டது

ஓ..
நெல்சன் மன்டேலா...!
இனத்தின் விடுதலைக்கு
வித்திட்ட
முத்து நீங்கள்.

Thursday, September 5, 2013

இது ஒரு தேர்தல் காலம்



 ‘தமிழ் தந்தி’  வாரப் பத்திரிகையில் 1-9-2013 அன்று பிரசுரமான எனது கவிதை 


Sunday, August 4, 2013

அருள் மழை பொழியும் புனித நோன்பு



பன்னிரண்டு ஆண்டுகளில்
ஒரு முறை
மலை மீது மலர்வது
குறிஞ்சிப் பூ!

பன்னிரண்டு மாதங்களில்
ஒரு முறை
பூமியிலே பூப்பது
நோன்பு!

ஸகாத் எனும் பூ

4-8-2013 அன்று 'தமிழ்த்ந்தி' வாரப் பத்திரிகையில் பிரசுரமான கவிதை)


உடலின் ஸகாத்
நோன்பு!
உள்ளத்தின் ஸகாத்
அன்பு!

Thursday, January 24, 2013

பாலையில் பூத்த ரோஜா





ஆழி சூழ்ந்த பூவுலகில்
   ஆதவனாய் நபி பிறந்தார்
பாலை மண்ணில் சோலை வனமாய்
   பாரில் எங்கள் நபி பிறந்தார்
சோலை வனத்தில் நறு மலராக
   சத்தியத் தூதர் நபி பிறந்தார்

Friday, January 18, 2013

தீர்ப்பு அல்ல தீ!


(சவூதி அரேபியாவில் மரண தண்டணை விதிக்கப்பட்ட இலங்கை பணிப்பெண் ரிஸானா நாபிக்கிற்காக எழுதப்பட்ட கவிதை)

 ஏழ்மை செடியில் பூத்த
சோலை மலருக்கு
பாலை மண்ணில்
சிரச்சேதம்!


சகோதரி ரிஸானா நபீக்!
உனக்கு வழங்கப்பட்டது
தீர்ப்பு அல்ல!
தீ !