Saturday, December 7, 2013

விடுதலை கீதம் ஓய்ந்து விட்டது



ஒரு
கறுப்புச் சூரியன்
ஓய்வெடுத்துக் கொண்டது
நிரந்தரமாய்!

முழு நிலவு
முழுமையாய்
மறைந்தது
கால(னின்) மேகத்திற்குள்..!

சிறையை வென்றவரை
காலன்
சிறைப்படுத்திக் கொண்டான்!

ஒரு சகாப்தம்
நிறைவுக்கு வந்தது!
ஒரு நீண்ட வரலாற்றின்
இறுதி அத்தியாயம்
எழுதப்பட்டு விட்டது.
விடுதலை கீதம்
ஓய்ந்துவிட்டது

ஓ..
நெல்சன் மன்டேலா...!
இனத்தின் விடுதலைக்கு
வித்திட்ட
முத்து நீங்கள்.

Thursday, September 5, 2013

இது ஒரு தேர்தல் காலம்



 ‘தமிழ் தந்தி’  வாரப் பத்திரிகையில் 1-9-2013 அன்று பிரசுரமான எனது கவிதை 


Sunday, August 4, 2013

அருள் மழை பொழியும் புனித நோன்பு



பன்னிரண்டு ஆண்டுகளில்
ஒரு முறை
மலை மீது மலர்வது
குறிஞ்சிப் பூ!

பன்னிரண்டு மாதங்களில்
ஒரு முறை
பூமியிலே பூப்பது
நோன்பு!

ஸகாத் எனும் பூ

4-8-2013 அன்று 'தமிழ்த்ந்தி' வாரப் பத்திரிகையில் பிரசுரமான கவிதை)


உடலின் ஸகாத்
நோன்பு!
உள்ளத்தின் ஸகாத்
அன்பு!

Thursday, January 24, 2013

பாலையில் பூத்த ரோஜா





ஆழி சூழ்ந்த பூவுலகில்
   ஆதவனாய் நபி பிறந்தார்
பாலை மண்ணில் சோலை வனமாய்
   பாரில் எங்கள் நபி பிறந்தார்
சோலை வனத்தில் நறு மலராக
   சத்தியத் தூதர் நபி பிறந்தார்

Friday, January 18, 2013

தீர்ப்பு அல்ல தீ!


(சவூதி அரேபியாவில் மரண தண்டணை விதிக்கப்பட்ட இலங்கை பணிப்பெண் ரிஸானா நாபிக்கிற்காக எழுதப்பட்ட கவிதை)

 ஏழ்மை செடியில் பூத்த
சோலை மலருக்கு
பாலை மண்ணில்
சிரச்சேதம்!


சகோதரி ரிஸானா நபீக்!
உனக்கு வழங்கப்பட்டது
தீர்ப்பு அல்ல!
தீ !