Sunday, November 1, 2015

வாழ்த்துப்பா



(நீர்கொழும்பு பெரியமுல்லையில் அமைந்துள்ள அஹ்மதியா பாலர் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைவதையிட்டு வெள்ளி விழா 'கலை விழா' ஞாயிற்றுக்கிழமை (1-11-2015) மாலை அஹ்மதியா ஜுப்லி மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் அடியேன் வாழ்த்துப் பா வாசிக்கும் காட்சியும், சபையோரும்)
                    

                 வெள்ளி விழாக் காணும்
                        அஹ்மதிய்யா பள்ளிக் கூடமே
                   துள்ளி;த் திரியும் பாலகர்கள்
                        அறிவைத் தேடும் கூடமே!

                   வண்ணத்துப் பூச்சிகள்
                        பறக்கும் சோலையே
                   சின்னஞ் சிறு சிறுவர்கள்
                        கல்வி கற்கும் சோலையே!

                   சீர் கல்வி நற்பண்பு
                        பாலர் வகுப்பிலே
                   வேர் பதிக்கும் நிச்சயமாய்
                       ‘அஹ்மதிய்யா' வகுப்பிலே!

Wednesday, July 29, 2015

உலக நிலா உதிர்ந்தது


உலக நிலா
உதிர்ந்தது!
பாரத மண்ணின்
அறிவியல் சூரியன்
விண்ணகம் புறப்பட்டது!

கனவு கண்ட
ஞான விழிகள்
மூடிக் கொண்டன
நிரந்தரமாய்....

ஒரு வரலாற்றுப் புத்தகத்தின்
இறுதி அத்தியாயம்
முற்றுப் பெற்றது.

'அக்கினிச் சிறகை'
தந்த ஆளுமை
பறந்து போனது

பாரதம் துறந்து!

Sunday, July 19, 2015

என் ஆன்மாவின் கவிதை இறைவன்



என் ஆன்மாவில் இருப்பவனே!
ஏக இறைவனே!
நினை நான் எப்படி புகழ்வேன்?

துன்பங்கள்
என்னை தீயாய் பொசுக்கும் போது
மழை நீராய் பொழிந்து
அவற்றை அணைப்பவனே

நான் ஒன்றுமில்லாத வெற்று நிலம் !
நீ தான் வளங்கள் தந்தாய்.
இந்த வெற்று நிலத்தில் இருக்கும்
மரஞ், செடி, கொடிகள்
மலர்கள், கனிகள் எல்லாம்
நீ விதைத்த விதைகள்
நீ பொழிந்த அருள்கள்

நான் எப்போதெல்லாம்
துயரச் சேற்றில் மூழ்குவேனோ
அப்போதெல்லாம் நீ தான்
கைகொடுத்து காப்பாற்றுகிறாய்!
நான் ஒரு தூசு!
காய்ந்த சருகு!
புயலில் அகப்பட்ட காகிதத் துண்டு!
ஆனால்
நான் அவமானப்படும் போதெல்லாம் - நீ
என்னை கௌரவப்படுத்துகிறாய்!
காயப்படும் போதெல்லாம்
சுகப்படுத்துகிறாய்!

சிந்தனை செய் மனிதா!




ஓ...மனிதனே!
எங்கே ஓடிக்கொண்டிருக்கிறாய்?
ஓய்வின்றி
பொருள் தேடி ஓடும் நீ
இதனைப் பற்றியும்
பொறுமையாய் சற்று யோசி!

மனிதா.... !
உன்  உறுப்புக்களை
உருப்படியாய் பயன்படுத்துகிறாயா?
நல்லவைகளை
தேக்கி வைத்துக் கொள்ளவும்;
தீயவைகளை
நீக்கி வைத்துக்கொள்ளவும்
உனக்குத் தெரியுமா?

புனித ரமழானை மறவோமே!



இறை மறை அருளப் பெற்ற
   இனிய நல் ரமழானே!
அருள் மாரி  பொழிந்து வந்த
   அற்புத ரமழானே!
இருள் நீக்கி ஒளி தந்த
   உன்னத ரமழானே!
இறை வனவன் நேசத்;தை
   பெற்றுத் தந்த ரமழானே!


இச்சைகளை அடக்கச் செய்த
   இங்கித ரமழானே!
அச்சங் கொள் இறைவன் மீது
   ஏன்று சொன்ன ரமழானே!
கஷ்டங்களை உணர்ந்து கொள்ள
   களம் அமைத்த ரமழானே!
நஷ்டப்பட்ட மனிதருக்கு
   நலங் கொடுத்த ரமழானே!