Friday, January 18, 2013

தீர்ப்பு அல்ல தீ!


(சவூதி அரேபியாவில் மரண தண்டணை விதிக்கப்பட்ட இலங்கை பணிப்பெண் ரிஸானா நாபிக்கிற்காக எழுதப்பட்ட கவிதை)

 ஏழ்மை செடியில் பூத்த
சோலை மலருக்கு
பாலை மண்ணில்
சிரச்சேதம்!


சகோதரி ரிஸானா நபீக்!
உனக்கு வழங்கப்பட்டது
தீர்ப்பு அல்ல!
தீ !




வறுமைக்கு
இழைக்கப்பட்ட
மாபெரும் கொடுமை!


“தவாத்மி” சிறையில்
துண்டிக்கப்பட்டது
உனது
தலை அல்ல!
நீதி தேவதையின் சிரசு!

“ஷரீஆ” தீர்ப்பில் தவறில்லை!
ஆனால்
சரியாக விசாரணை
நடத்தப்படவில்லை!


சிறுமிக்கு
சிரச்சேதம் செய்து
மாறாத வடுவை
தேடிக்கொண்டது
சவூதி!


மன்னிக்கத்  தெரிந்தவர்கள்
மன்னிக்கத் துனிந்தவர்கள்  
பிறந்த மண்ணில்
உனக்கு தண்டிப்பு !
சிரசு துண்டிப்பு!


இயேசுவை
சிலுவையில் அறைந்தார்.
உன்னை சிறையில்
அறைந்தார்!


நீ
வறுமையின் குறியீடு!


எல்லோரும்
பேதங்கள்  இல்லாமல்
உனக்காக அழும் போது....
அங்கே
புனிதர் பிறந்த மண்ணில்
பாவப்பட்ட ஜென்மங்கள்!




மொட்டு நறுக்கப்பட்டதாம்
அதனால்
பூவுக்கு வைத்தார்கள்
நெருப்பு!


தூ....!
மன்னிக்கத் தெரியாத
மனங்களுக்கு வழங்க வேண்டும்
தூக்கு!


ரிஸானா...!
கொல்லப்பட்டது
நீ அல்ல.
மனிதம்!


சகோதரி ...!
உனக்காக காத்திருக்கிறது
மறுமையில்
உயர்ந்த சுவர்க்கம்!

-    கலாநெஞ்சன் ஷாஜஹான்  

No comments:

Post a Comment