Thursday, June 25, 2020

நீர்கொழும்பு மீனவர்களின் வலையில் அகப்பட்ட பல இலட்சம் ரூபா பெறுமதியான மீன் ஏலத்தில் விற்பனை செய்வதற்காக ஜப்பானுக்கு அனுப்பி வைப்பு



நீர்கொழும்பு மீனவர்களின் வலையில் அரிய வகை மீன் ஒன்று அகப்பட்டுள்ளது.
நீர்கொழம்பு கடற்பகுதியிலிருந்து கடந்த மாதம் 7 ஆம் திகதி  வின்மெரின் (Win marine)  என்ற  பெயர் பொறிக்கப்பட்ட ரோலர் படகில் தொழிலுக்குச் சென்ற ஏழு பேர் அடங்கிய மீனவர்களே இந்த மீனைப் பிடித்துள்ளனர்.+
Southern Bluefin tuna என்ற ரகத்தையுடைய கெலவல்லா மீனே பிடிக்கப்பட்டுள்ளது.  மீனவர்கள்  மீன்களைப் பிடித்துக் கொணடு வரும் போது கடந்த ஆறு தினங்களுக்கு முன்னர் இந்த அரிய வகை அதிக பெறுமதியுடைய மீன் அகப்பட்டுள்ளது.
இதன் பெறுமதி அதிகம் என்பதாலும் Southern Bluefin tuna என்ற ரகத்தையுடைய மீனின்  உயர் தரத்தை உடைய மீனின் ஒரு கிலோவினது விலை ஐயாயிரம் (5000 டொலர்) டொலர்  வரை
விற்பனை செய்யப்படுவதாலும் இந்த மீன் நேற்றை தினம் ஜப்பானுக்கு ஏலத்தில் விற்பனை செய்வதற்காக அனுப்பி (ஏற்றுமதி) வைக்கப்பட்டுள்ளது.
நீர்கொழம்பு  மீனவர்களின் வலையில் அதிக நிறையுடையதும் அதிக பெறுமதி உடையதுமான் கெலவல்லா மீன் அகப்பட்டுள்ளமை  மீனவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏறபடுத்தியுள்ளது.







No comments:

Post a Comment