Saturday, November 7, 2009





சுனாமியும் நாங்களும்


2004 ம் ஆண்டின்
இறுதி மாதத்தின்
இறுதி பூரணைத் தினம் ! ..
( 26 ம் திகதி)

என்றும் போல்
அன்றும்
காலைப் பொழுது
இனிதாய்ப் புலர்ந்தது.

விடுமுறை தினத்தன்று
விடிந்த பொழுது
கொடுமையை கையோடு
கூட்டி வந்தது.

உதயம்
அஸ்த்தமனத்தை
அழைத்துவந்தது !



ஆம்! கடற்கோள்!!
சுனாமி!!!

அன்று
ஆழிக்குள் நில நடுக்கம் !
கடலில் நில அதிர்ச்சி!
கடலின் நில வயிறு
இரன்டாகப் பிளந்ததன்று!
நீரில் பெரும் தளம்பல் !
கடலுக்குப் பெருந்தாகம் !
கடல் பின்னோக்கிப் போனதன்று!

அபாயத்தின் அறிகுறியை
அறியாத மக்கள்
பின்னோக்கிப் போன கடலில்
முன்னோக்கிப் போய்
அதிசயம் பார்த்தனர்.
சிலர் கரையில் ஒதுங்கிய
மீன்களைப் பிடித்தனர்
சிறுவர் சிப்பி பொறுக்கினர்!

பின்னோக்கிப் போனகடல்
மீன்டும்
முன்னோக்கிப் பாய்ந்து வர
கடலில் இடி முழக்கம்
அலையில் பெருஞ்சீற்றம்
ஓ!வென எழுந்தபடி
கடல் ஊரில் புகுந்ததன்று !

நிலத்தின் கண்ணீh;
நீரைத் தொட்டது
நீரின் கண்ணீர்
நாட்டையே சுட்டது!
ஆழியின் இரும்புக்கரங்கள்
பேரலை விரல்கள் நீட்டி
கரையோர ஊரெல்லாம்
தரைமட்டம் செய்தன.

நீர் ஊருக்குள் புகுந்து
போர் புரிந்தது.

மக்களெல்லாம்
நிராயயுத பாணிகளாய் !


பேரூந்துப் பாதைகளில்
பேரலை ஓடியது
ரயில் தண்டவாளங்களில்-அலை
ருத்ரதாண்டவம் ஆடியது.

வீடுகள்இ விருட்சங்கள்
பள்ளிகள். பன்சளைகள்
கோயில்கள், சேர்ச்சுகள்
கடைகள்,கட்டடங்கள்
சாலைகள், பாலங்கள்
ஹோட்டல்கள், தோட்டங்கள்
படகுகள், வாகனங்கள்
எல்லாம்
சில நிமிட இடைவெளியில்
சின்னாபின்னமாயின.

மைதானங்கள்
மயானமாயின.
மயானங்கள்
மைதானமாயின.

ஊர்
நீரானது .

நகரம்
நரகமானது.

நாடு
சுடுகாடானது.

கடல் குளித்து
மகிழ்ந்த மனிதரை
அன்று
கடல் குடித்து மகிழ்ந்தது .

கொடுத்து மகிழ்ந்த கடல்
எடுத்து மகிழ்ந்தது .

மீன்களை தந்த கடல்
தந்தது அன்று
மரணித்த உடல் .

இரணம் தந்த கடல்
மரணம் தந்தது.

மீன் பிடித்து வாழ்ந்தவரை
தான் பிடித்து
உண்டது கடல்.
கவிஞர்கள் கோடி
பாடிக்களிக்க
சிறுவர்கள் கூடி ஆடிக்களிக்க
மேடை விரித்த கடல்
அன்று
அப்பாவி மனிதர்கள் கூடி
ஒப்பாரிப் பாட
பாடை விரித்தது.
ஆம் !
அந்த
கறுப்புக் கடல் தினத்தன்று
துரத்திவரும் கடல் கண்டு
மக்கள் உடல் நடுங்கி ஓடினர்.
ஓடுகின்ற மக்களை
சூறாவளி வேகத்துடன்
புறப்பட்ட சுனாமி
கோர வாய் திறந்து
கபளீகரம் செய்தது.

கடல் துரத்தும்
காட்சிப் பார்த்தும்
கடல் வருகின்ற
சேதி கேட்டும்
ஊர் இன்னொரு
ஊருக்குள் ஓடியது.

அபயம் தேடி
ஓடுகின்ற மக்களை
அபாயம் துரத்தியது .

எங்கும் ஓலம்
எங்கும் பதட்டம்
எங்கும் கண்ணீர்
எங்கும் தண்ணீர்
எங்கும் கடல்
எங்கும் உடல்
எங்கும் அச்சம்!.
எங்கும் இருந்ததோ
சுனாமியின் எச்சம் !

ஆழிப் பேரலையின்
ஊழித் தாண்டவம்
சில நிமிட நேரத்தில்
அடங்கிப் போனது .

ஊரைப் புசித்து
பசியை ஆற்றிக் கொண்ட ஆழி
தன் இருப்பிடம் நோக்கி
புறப்பட்டது கண்ணீரோடு!

தண்ணீரின் கண்ணீரை
யார் அறிவார்?

கண்ணீரோடு போகும் தண்ணீரே!
உனக்குக் கேட்கிறதா
இந்த மக்களின் அழுகுரல்?



மக்களின் செந்நீரோடு போகும்
சாக்கடையே
உனக்குக் கேட்கிறதா
தாயை இழந்த
குழந்தையின் அழுகுரல் ?
பிள்ளையை இழந்த
பெற்றோரின் அழுகுரல் ?
கணவனை இழந்த
மனைவியின் அழுகுரல் ?
மனைவியை இழந்த
கணவனின் அழுகுரல் ?
சகோதரனை இழந்த
சகோதாரியின் அழுகுரல் ?
சகோதாரியை இழந்த
சகோதரன் அழுகுரல்?
குடும்பத்தை இழந்த
உயிரின் அழுகுரல்?
சொந்தங்களை இழந்த
பந்தங்களின் அழுகுரல் ?
பந்தங்களை இழந்த
சொந்தங்களின் அழுகுரல் ?
சொத்து சுகம் இழந்த
மக்களின் அழுகுரல் ?
நண்பனை இழந்த
நண்பனின் அழுகுரல் !
மனிதர்களை இழந்த
மனிதாபிமானத்தின் அழுகுரல் !

யார் யாருக்கு
ஆறுதல் கூறுவது?
யார் யாரின்
கண்ணீரை துடைப்பது?
எல்லா இல்லங்களிலும் புகம்பம்
எல்லா இல்லங்களிலும் மையம்

யாஅல்லாஹ்!
கடவூளே..!
தெஹியனே.!
கார்த்தரே!
எங்கும் இறை நாமம்
ஓங்கி ஒலிக்கிறது .

ஓ!.சுனாமியே !
உன்னை ஒரு சுனாமி
அடித்துச் செல்லக்கூடாதா?

ஆழ்கடலே !
கடற் கரையில் இருந்தபடி
உன்னையே வெறித்தபடி
ஒரு தாய் காத்திருக்கிறாள்!
நீ
பறித்துப்போன குழந்தைக்காய்.

இதோ பார் !
மலையளவு கவலையோடு
கைகளில் குழந்தையோடு
ரத்தக் கண்ணீர் வடிக்கின்ற
பாசக் கணவனை
நீ கொண்டுபோன
மனைவி எங்கே?

அங்கே பார்!
முழுதாக இன்னும்
மூன்று வயது முடியவில்லை
அழுகின்ற மழலைதனை
நீ அபகாரித்த
அன்னையைத் தா

இங்கே பார் !
வாழ்க்கையில் பிடிப்பற்று
சோகம் சுமந்த முகத்தோடு
நடமாடும் பிணங்களைப் போல்
வாழுகின்ற பிள்ளைகளை
நீ எடுத்துப்போன
பெற்றோரைத் தா!


அங்கு பார்!!
குவிந்து கிடக்கும் சவங்களிலே
அழுதபடி தேடுகின்ற
அப்பாவி மனிதர்களை
நீ புசித்த சொந்தங்களைத் தா!

இங்கு பார'!
உயிர்தீயில் வெந்தபடி
தன் இருப்பை நொந்தபடி
தன் உயிரைத் தேடுகின்ற
இளவயது காதலரை
நீ கடத்திப்போன
துணைகளைத் தா

எதிரே பார்!
வயல்களும் ஆறுகளும்
குளங்களும் தோட்டங்களும்
மரங்களும் மலர்களும்
சாலைகளும் சோலைகளுமாய்
வனப்பாய் இருந்த எங்கள்
கடலோரக் கிராமம் எங்கே?
இடிபாடுகளுக்கிடையே
இன்னும் பிணவாடை வீசுகிறது அங்கே.
நீ குடித்த கிராமத்தைத் தா !

எங்கும் பார்!
நீ வந்து போன பாதைகளில்
அழிவின் சின்னங்களை
உயிர் குடித்த சன்னங்களை
அவலத்தின் காட்சிகளை
கண்கண்ட சாட்சிகளை

நீ
மீண்டும் வராமல் மாண்டுபோ !

முன்பு
விடுமுறைத் தினம் வந்தால்
உனைத் தேடி நாம் வருவோம்
உன் காற்றை நாம் புசிப்போம்
உன் எழிலை நாம் ரசிப்போம்
அலை நீரில் கால் நனைப்போம்
கரை முழுதும் கால் பதிப்போம்
கடல் மணலில்
உடல் புதைப்போம்
களிப்புடனே தலை குளிப்போம்
சிப்பி பொறுக்கி சேகரிப்போம்
மணல் வீடுகட்டி
நாம் மகிழ்வோம்

இப்போது-
தினம் தினம் உன் நினைப்பு
திடீரென வருகிறது
உனைக் காணும் போதினிலே
சுனாமிதான் தொரிகிறது

எங்களிடமிருந்து
எல்லாவற்றையூம்
எடுத்துப் போனாய்
ஒன்றைத் தவிர
இன்னொரு தடவை நீ
படையெடுத்து வந்தாலும்
அதைப் பறிக்க முடியாது .

ஆம்
நீ வந்த பிறகுதான் தெரிந்தது
எங்களிடமும் நீ இருப்பது.
அது
மனித நேய சுனாமி.

ஆராஜகம் கட்டவிழ்த்து
கொடுமைகள் தலைவிரித்து
சுயநலப் பேய்ச்சிரித்து
வாழ்ந்த உலகினில்
மனித நேயச் சூரியன்
புதுப் புறப்பெடுத்தான்
உதவிக்கதிர்கள் நீட்டி
ஒளிகொடுத்தான்.

அழுக்குப்படிந்திருந்த மனிதத்தை
நீ
கழுவிச் சென்றாய்.

சுனாமி
நீ வந்து போனதால்
நாங்கள்
நொந்து போனாலும்
சிந்திக்கவும்-எமை
சீர் செய்யவும்
பாடம் பலதை
புகட்டிவிட்டே போனாய் .

நீ வந்த பின்னர் தான்
உன்சோதனை
ஒரு போதனை
என்பது புரிந்தது.


இது வரை
வாழ்ந்த நாட்களில்
பேதங்கள் பேசிப் பேசியே
பிரிந்திருந்தோம் .

இன்று
முஹம்மதும் மூர்த்தியும்
மஹிந்தவும் மார்கசும்
ஒரே புதை குழியில் .

நீ
சமத்துவத்தை
சமாதியில் காட்டித்தந்தாய் .

உள்ளோரும் இல்லாதாரும்
முதலாளியும் தொழிலாளியும்
உயர்ந்தோரும் தாழ்ந்தோரும்
ஒரே அகதி முகாமில்.

சமதர்மத்தை
எமக்கு நீ
சுனாமியால் காட்டித்தந்தாய்.


ஓடி ஓடி
தேடிய செல்வம்
ஒரு நொடியில்
கடலின் மடியில்
நிலையில்லாத உலகத்தின்
நிதர்சனத்தை காட்டித்தந்தாய்.

மாடி மனை கட்டி
குடி இருந்த மக்களெல்லாம்
சில நிமிட நேரத்தில்
வீதிக்குவர-நீ
விதி செய்தாய்-இல்லை
சதி செய்தாய்.

குடிசையில் இருந்தவரும்
கோபுரத்தில் இருந்தவரும்
இன்று கூடாரத்தில்.

உலகம் ஒரு தங்கு மடம்
எல்லோருக்கும் புரிகிறது.

அது போல்
ஆறறிவு மிருகங்களின்

கண்கண்ட சாட்சிகளை

நீ
மீண்டும் வராமல் மாண்டுபோ !

முன்பு
விடுமுறைத் தினம் வந்தால்
உனைத் தேடி நாம் வருவோம்
உன் காற்றை நாம் புசிப்போம்
உன் எழிலை நாம் ரசிப்போம்
அலை நீரில் கால் நனைப்போம்
கரை முழுதும் கால் பதிப்போம்
கடல் மணலில்
உடல் புதைப்போம்
களிப்புடனே தலை குளிப்போம்
சிப்பி பொறுக்கி சேகாpப்போம்
மணல் வீடுகட்டி
நாம் மகிழ்வோம்

இப்போது-
தினம் தினம் உன் நினைப்பு
திடீரென வருகிறது
உனைக் காணும் போதினிலே
சுனாமிதான் தொரிகிறது

எங்களிடமிருந்து
எல்லாவற்றையூம்
எடுத்துப் போனாய்
ஒன்றைத் தவிர
இன்னொரு தடவை நீ
படையெடுத்து வந்தாலும்
அதைப் பறிக்க முடியாது .

ஆம்
நீ வந்த பிறகுதான் தொரிந்தது
எங்களிடமும் நீ இருப்பது.
அது
மனித நேய சுனாமி.

ஆராஜகம் கட்டவிழ்த்து
கொடுமைகள் தலைவிரித்து
சுயநலப் பேய்ச்சிரித்து
வாழ்ந்த உலகினில்
மனித நேயச் சூhpயன்
புதுப் புறப்பெடுத்தான்
உதவிக்கதிர்கள் நீட்டி
ஒளிகொடுத்தான்.

அழுக்குப்படிந்திருந்த மனிதத்தை
நீ
கழுவிச் சென்றாய்.

சுனாமி
நீ வந்து போனதால்
நாங்கள்
நொந்து போனாலும்
சிந்திக்கவும்-எமை
சீர் செய்யவும்
பாடம் பலதை
புகட்டிவிட்டே போனாய் .

நீ வந்த பின்னர் தான்
உன்சோதனை
ஒரு போதனை
என்பது புரிந்தது.


இது வரை
வாழ்ந்த நாட்களில்
பேதங்கள் பேசிப் பேசியே
பிரிந்திருந்தோம் .

இன்று
முஹம்மதும் மூர்த்தியும்
மஹிந்தவும் மார்கசும்
ஒரே புதை குழியில் .

நீ
சமத்துவத்தை
சமாதியில் காட்டித்தந்தாய் .

உள்ளோரும் இல்லாதாரும்
முதலாளியும் தொழிலாளியும்
உயர்ந்தோரும் தாழ்ந்தோரும்
ஒரே அகதி முகாமில்.

சமதர்மத்தை
எமக்கு நீ
சுனாமியால் காட்டித்தந்தாய்.


ஓடி ஓடி
தேடிய செல்வம்
ஒரு நொடியில்
கடலின் மடியில்
நிலையில்லாத உலகத்தின்
நிதர்சனத்தை காட்டித்தந்தாய்.

மாடி மனை கட்டி
குடி இருந்த மக்களெல்லாம்
சிpல நிமிட நேரத்தில்
வீதிக்குவர-நீ
விதி செய்தாய்-இல்லை
சதி செய்தாய்.

குடிசையில் இருந்தவரும்
கோபுரத்தில் இருந்தவரும்
இன்று கூடாரத்தில்.

உலகம் ஒரு தங்கு மடம்
எல்லோருக்கும் புரிகிறது.

அது போல்
ஆறறிவு மிருகங்களின்
வாழ்வதால்தானா
வீழ்ந்து போனான்?
அவைகள்
அவைகளாக வாழ்வதால்தானா
வாழ்ந்து போயின!

இயற்கையை இயற்கையாய்
அறியும் அவையும்
உயர்தினையே.
எழுகின்ற ஆழ்கடலே!
அழுகின்ற எமைப் பார்க்க
ஏளனமாய் இருக்கிறதா?

நாம் வீழ்கின்ற மனிதரில்லை .
சாம்பல் மேட்டிலிருந்து
உயிர்த்தெழுகின்ற
பீனிக்ஸ் பறவைப் போல்
மீண்டும் நாம் எழுவோம்!

நீ
எத்தனை தடவை வந்தாலும்
மீண்டும் மீண்டும்
நாம் எழுவோம் !

No comments:

Post a Comment