Saturday, November 7, 2009





ஓலிம்பிக் வீராங்கனை சுசந்திகா


சுசந்திகா!
கறுப்புப் புயலே!

சிட்னி ஒலிம்பிக்கில்
வெண்கலத்தை வென்ற
வீரப் பெண்ணே!

நீ கால்களில் அணிந்திருப்பது
பாதணிகளா?
இல்லை! இறக்கைகளா?

அன்று
உன் கிராமத்தின்
தென்னந் தோட்டங்களில்
தென்றலாய் ஓடித்திரிந்தாய்!

இன்று
சிட்னி நகரில்
புயலாக அல்லவா
புதுமை புரிந்தாய்!



நீ ஓடியது
குறுந்தூரம்தான்.
ஆனால்
எமது விளையாட்டு வரலாற்றில்
அது நெடுந்தூர சாதனை !

பெண் புயலே!
நீ
தன்னம்பிக்கையின் இலக்கணம்
முயற்சியின் வரைவிலக்கணம்!
நீ
இந்த மண்ணின்
தேசிய சொத்து!
உன் வாழ்க்கையில்
பலருக்கும் பாடம் இருக்கிறது.

நீ
சோதனைகளை
சாதனைகளாக்கிக் கொண்டவள்.
உன் வறுமை
உன் திறமையை வெல்லவில்லை!
உன் பெருமை
உன் பொறுமையக் கொல்லவில்லை!

உன் பெயர் நிலைத்திருக்கும்
வரவாற்றில் மட்டுமல்ல
ரசிகர்களின் இதயங்களிலும் தான்.

ஓட்ட ராணியே!
உன் கழுத்தில்
பதக்கம் ஏறிய போது
எங்கள் தேசியக் கொடி
உயரப் பறந்து
தேசத்தின் தோள்களில் அல்லவா
புகழ் மாலை சூடிவிட்டது!

நீ வெள்ளிப் பதக்கத்தை
வெல்லும் வாய்ப்பை
வினாடியின் வினாடிக்குள்
தவறவிட்டாலும்
உன் வெண்கலப் பதக்கம்
எங்களுக்கு தங்கப் பதக்கம்தான்.

நீ
விளையாட்டில்
ஓய்வு பெற்றாலும்
எல்லோருடைய இதயங்களிலும்
என்றும் ஓடிக்கொண்டுத்தான் இருப்பாய்!!

No comments:

Post a Comment