Monday, November 2, 2009






வெற்றிச் சூரியனே ! ஜய சூரியா!


“ஜய சூரியா“ !
வெற்றிச் சூரியனே !
உன் ஒளி
உலகெங்கும் பரவியிருக்கிறது.

நீ
கிரிக்கட் வரலாற்றில்
ஒரு மைல் கல்!

நீ
சாதனைப் புத்தகத்தின்
சரித்திரப் பக்கங்களில்
உனது பெயரை
பல முறை பதிய வைத்தவன் !
புதிய பக்கங்களை
திறந்து வைத்தவன்

ஒரு நாள் போட்டியின்
ஆட்ட வியூகத்தையே
மாற்றிக் காட்டியவன்!
“டெஸ்ட்” போட்டியில்
இணையாட்ட ஓட்டங்களால்
“எவரெஸ்ட்” டையே தொட்டவன்!

உலத பந்து வீச்சாளர்களுக்கு
உன்னைக் கண்டால்
சிம்ம சொப்பனம் தான்.



நீ
உன் துடுப்பாட்ட மட்டைக்கு
மந்திரமா சொல்லிக் கொடுத்திருக்கிறாய்?
இல்லை! இல்லை!
விளையாடும் தந்திரம்
சொல்லிக் கொடுத்திருக்கிறாய்.
அதனால் தானே யந்திரம் போல்
ரன்களை குவிக்கிறாய்.

கறுப்புச் சிங்கமே !
நீ மட்டையோடு
மைதானத்துக்குள் வந்தால்
எதிரணியினர் எல்லாம்
உனக்கு வெள்ளாடுகள் தான்.

நீ
துடுப்பெடுத்தாடும் போது
எல்லைக் கோட்டுக்கு வெளியேயும்
ஒரு அணியை வைக்க வேண்டும்.
இல்லாவிட்டால்
பார்வையாளர்கள் அல்லவா
“கட்ச்” பிடிக்கிறார்கள்.

உன் வெற்றியின்
ரகசியம் என்ன தெரியுமா?
நீ
உனக்காக விளையாடாமல்
அணிக்காக வியையாடுவதுதான்.

அது எப்படி?
நீ
பந்து வீச வந்தால்
ஓட்ட வேகம் குறைகிறது?
ஆட்டம் சோபிக்கிறது?.
வெற்றி நிச்சயிக்கப்படுகிறது?

ஓ....
உன் பெயரிலேயே
“ஜயம்” இருக்கிறதே!
அதனால் தானே?
வெற்றிகளை மட்டும்
சுற்றிக் கொண்டிருக்கிறாய்.

“ஜய சூரியா“ !
உலகம் உள்ளவரை
உலக கிரிக்கட்டில்
உனது பெயர் இருக்கும்!

No comments:

Post a Comment