Sunday, December 16, 2012

வாலிபக் கிழடு






வாலிபக் கிழடு

(இக்கவிதை நகைச்சுவைக்காக மட்டும் எழுதப்பட்டது. யார் மனதையும் புன்படுத்த அல்ல)


மூன்றடி உயரங் கொண்ட மானிடன் - தன்
    மனதினிலே தனக்(கு) அவர் மன்மதன்
மான் போல் துள்ளி யோடும் பெண்கள் - நடந்து
    முன் போனால் துடிக்குமிவர் கண்கள்




‘தவக்களை” யின் சாயலிந்த நாயகன் - கிழடு
    தெரிந்தாலும் மறைக்கின்ற வாலிபன்
சிவாஜி போல் நடையென்ற நினைப்பு  - கடந்து
    செல்கையிலே எல்லோர்க்கும் சிரிப்பு




தமிழோடு பேசிடுவார் ஆங்கிலம் - அது
     தரணிக்கிவர் தந்த “தமிங்கிலம்”
கமலஹாசன் தோற்றுவிடும் புன்னகை நரை
     கண்டாலும் காட்டா(து) இவர் சிகை


ஆந்தை போன்று பிதுங்கி நிற்கும் விழிகள் - தனியே
     உளரிடுவார் கோடி காதல் மொழிகள்
விந்தையாக  உடுத்திடுவார் ஆடை - இவர்
    வந்ததுமே எங்கும் 'கொலோன்' வாடை



எப்போதும் புகைத்திடுவார் பிரிஸ்டல் - அப்போது
    இவர் புரிவார் கோடி “ரஜனி ஸ்டைல்’
“ஹிப்பி” போல் குளித்திட வெறுப்பு வயது
   அறுபது கடந்தாலும் வாலிபக் குறும்பு



 - கலாநெஞ்சன் ஷாஜஹான்
 



No comments:

Post a Comment