Monday, July 16, 2012

நிலவுக்கு வானத்தில் பகையில்லை




நிலவுக்கு வானத்தில் பகையில்லை
கடலுக்கு நதியுடன் பகையில்லை
இரவுக்கு பகலுடன் பகையில்லை
நட்பு மட்டும் நிலைப்பதில்லை சிலர்
நட்பு மட்டும் நிலைப்பதில்லை     


சேர்ந்தே இருப்பார் இன்பத்திலே
செய் நன்றி மறப்பார் துன்பத்திலே
பணத்தை பார்க்கும் உலகத்திலே
குணத்தை பார்த்திட நேரமில்லை
யாரும் இங்கே நிலைப்பதில்லை- இதை
ஏனோ சிலரும் நினைப்பதில்லை   

இரவு என்பது விடியும் வரை
உறவு என்பது முடியும் வரை
வேசம் என்பது நடிக்கும் வரை
பாசம் என்பது இறக்கும் வரை
கற்பு என்பது இழக்கும் வரை - சிலர்
நட்பு என்பது இருக்கும் வரை         (நிலவுக்கு வானத்தில்)

முகத்தில் புன்னகை பூத்;திருக்கும்
நெஞ்சில் வஞ்சனை சேர்ந்திருக்கும்
தேவை என்றால் நாடிடுவார் - அவர்
காரியமான பின் ஓடிடுவார்
மனிதா இதயத்தை பேணிவிடு
நட்பின் புனிதத்தை காத்துவிடு      

(இக்கவிதை 12-7-2012 அன்று லண்டன் தமிழ் வானொலியில் ஒலிபரப்பானது)

No comments:

Post a Comment